Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, January 17, 2008

கல்லிலே கலைவண்ணம் கண்டான்

சமீபத்தில் கர்நாடகத்தில் உள்ள பேலூருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வெகு நாட்களுக்கு முன் அங்கிருக்கும் சிற்பம் ஒன்றை சித்திரமாக வரைந்திருந்தேன்.அந்த சிற்பத்தைத் தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். சிவனும் பார்வதியும் ஒயிலாக இடுப்பை வளைத்து நிற்கும் அந்த படத்தை பத்து வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் பார்த்த போது வரைந்தது இது. பேலூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான கண்கவரும் சிற்பங்களில் இதுவும் ஒன்று.

ஹொய்சள மன்னர்களின் இந்த மாபெரும் முயற்சியின் முன்னால் பல்லவர்களின் மாமல்லபுர சிற்பங்கள் மிக சாதாரணம். ஒருவகையில் இந்த ஒப்புமை பொருந்துமா என்பது சந்தேகமே.மாமல்லபுரம் குடைவரை கோவில்கள் எனப்படும் வகையை சேர்ந்தன. பாறையை குடைந்து செய்யப்பட்டன. வெட்டுதல் உண்டு, ஒட்டுதல் கிடையாது.

அதிகம் அறியப்படாத, நான் பார்த்த இன்னொரு குடைவரை கோவில் புதுக்கோட்டை அருகே இருக்கும் திருமயம் பெருமாள் கோவில்.அரங்கநாதர் என்று நினைவு.மேலே கோட்டை,கீழே கோவில். உண்மையிலேயே மிக அழகான அமைதியான கோவில் அது. வருமானமில்லாத ஏழை ரங்கநாதர்,பாவம்.

பேலூர் சிற்பங்களின் சிறப்பிற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.பேலூர் ஹளேபீடு-ல் பயன்படுத்தப்பட்ட கற்களை மிருது பாறைகள் (soap stones)என்று சொல்கின்றனர். ஆகவே அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளை சுலபமாக செய்ய முடியும். அதுவே கடினப் பாறைகளாகி விட்டால் சிற்பிகள் மிக அதிகமான பொறுமையுடன் வேலைத்திறனைக் காட்ட வேண்டியிருக்கும்.பெரும்பாலான தமிழக கோவில்களில் காணப்படும் சிற்பங்களும் granite எனப்படும் கடினப்பாறை வகையை சேர்ந்தது.மீனாட்சி அம்மன் கோவில்,ஆவுடையார் கோவில் சிற்பங்களை கண்டவர் நம்மூர் சிற்பிகளையும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.



மேலே உள்ள படம் இண்டியன் இங்க் உபயோகித்து வரையப்பட்டது. இதற்கு ஸ்டீல் பென் எனப்படும் நிப் மட்டும் உள்ள பேனாவில் தொட்டுத் தொட்டு வரைய வேண்டும். வரைந்து முடிக்கும் வரையில் இங்க் புட்டி திறந்தே வைத்திருக்க வேண்டும். ஓரிரு முறை கவிழ்ந்து பேப்பரும் படமும் சட்டையும் கறுப்பாக அலங்கோலமானதும் உண்டு. இதனாலேயே இதை விட்டு விட்டேன். வசதி என்னவென்றால் மை காய்ந்த பிறகு தண்ணீர் விழுந்தாலும் மை கரையாது.
மூல சிற்பத்தின் புகைப்படம் இதோ :

8 comments:

துளசி கோபால் said...

அசலும் நகலும் அற்புதம்.

மாமல்லபுரத்தையும் பேலூரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. இரண்டும் வெவ்வெறு வகை.

அததை அப்படியே பார்த்து ரசிக்கவேண்டும்.

ஹளபேடு போகலையா?

என் அண்ணன் இண்டியன் இங்க் பயன்படுத்திப் படங்கள் வரைவார்.


எல்லாம் அந்தக் காலம்......ஹூம்...

சதங்கா (Sathanga) said...

//அசலும் நகலும் அற்புதம்.//

repeateeei...

i have heard and haven't tried indian ink. as you said during work it will test our patience, but after work ... its remarkable result. your this picture tells that :) good work.

KABEER ANBAN said...

வாங்க துளசி மேடம். நீங்க சொன்னதும் சரிதான்.
//அததை அப்படியே பார்த்து ரசிக்கவேண்டும்//
தலைப்புல வந்த பாட்டு என்னையறியாமலே மாமல்லபுரத்தோட ஒப்பிட வச்சுடுச்சு. அதனாலதான் நானே ஒரு டிஸ்-க்ளெய்மர் போட்டுட்டேனே :)
// ஹளபேடு போகலையா //
ஹூம்! இல்லை. கூட இருக்கிறவங்க ஒத்துழச்சா எங்க வேணும்னாலும் எவ்வளவு நேரம் வேணும்னாலும் இருக்கலாம், பார்க்கலாம். கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு திரியரவங்களுக்கு கொடுப்பினை அவ்ளோ தான் :))

வடுவூர் குமார் said...

அட்டகாசமான செதுக்கல் அந்த சிலை.
கொஞ்சம் பெரிய அளவில் படத்தை ஏற்றிருந்தால் இன்னும் கிட்டக்க பார்த்திருக்கலாம்.

KABEER ANBAN said...

Thanks Sathanga. Indian ink seem to be widely used by magazine artists for, what is known as, "wash drawings" to bring out different levels of grey. Probably an art student may explain better.

KABEER ANBAN said...

வாங்க குமார். பெரிய படம் வேணும்னா Flickr-ல் வலையேற்றி விட்டு சொல்கிறேன். :)

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்பாத்ததை கை செய்யனும்ன்ன் எங்க அம்மா சொல்லுவாங்கா அதுதானா இது. என்ன சொல்ல.. ஏதோ இவ்வளவுபெரிய ஆள் நம்ப ஆள்ன்னு சொல்லிக்கலாம்

KABEER ANBAN said...

அய்யய்யோ, ஜலதோஷம் ஜன்னி எல்லாம் புடிச்சிக்க போகுது. ரொம்ப பெரிய வார்த்தைகளைப் போட்டு உச்சந்தலைய ஜில்லுன்னு ஆக்கிட்டீங்க. அடுத்தவாட்டி ரெண்டு குட்டு வச்சிடுங்க தி.ரா.ச. சரியா போயிடும். :))