Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, August 6, 2008

நான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு

கௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வருமே அதை நெனச்சு பாடினது தான் இந்த தலைப்பு. ஏனப்படிங்கிறத அப்புறம் சொல்றேன்.

முதல் முதலா பேஸ்டல் கலரில் கைவச்சபோது ரொம்ப திண்டாடி போயிட்டேன் அப்படின்னு சொன்னது சில பேருக்கு நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு மாசம் கஷ்டப்பட்டு தேறினப் படம். அப்போ அந்த கிளி படம் கைவசம் இருக்கவில்லை. இதோ இப்ப போட்டாச்சு. லேமினஷனால் கொஞ்சம் மங்கிப் போனாலும் அதுக்கு ஒரு இடம் வீட்டில கொடுத்திருக்கோம்.



கொஞ்சம் நாள் கழித்து ஒரு புகைப்பட சஞ்சிகையில் மூன்று கிளிகள் மரப் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கிற படம் உடனேயே நச்சுன்னு மனதிற்குள் புகுந்து கொண்டது. கிட்டத்தட்ட ஒன்றைரை மணி நேரத்திற்குள் அதை பேஸ்டல் வர்ணத்தில வரைந்து விட்டேன்.

ஒரு மாசம் எங்கே ஒன்றரை மணி எங்கே!

இந்த முறை வேண்டுமென்றே வர்ணத்தையெல்லாம் ஸ்மட்ஜ் எல்லாம் செய்யவில்லை. வர்ணம் எப்படி இயற்கையாக கை அழுத்தத்திற்கு ஏற்ப வரைதாளில் பற்றிக்கொண்டதோ அதன் போக்கில் விட்டு விட்டேன்.

படம் பத்தடி தூரத்திலிருந்து பார்த்தபோது எடுப்பாக இருந்தது. மீண்டும் லேமினஷன் செய்ய தைரியமில்லை. ”இத்தாலிய கோல்டு” சட்டம் வாங்கி அந்த கிளிகளை அடைத்து வைத்தேன். பலருக்கும் பிடித்த படமாயிருந்தது.

கூண்டில் அடைத்தாலும் வேளை வந்தால் பறந்து போயிடும்.

அமெரிக்காவிலிருந்து புதிதாக கல்யாணமான தம்பதிகள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பரிசு என்ன தருவதென்று குழம்பிய போது இந்த படத்தை பாராட்டியதைக் கண்டு அதையே தூக்கி கொடுத்து விட்டாள் என் சகதர்மிணி. 'அப்பா! ஒண்ணை ஒளிச்சு கட்டியாச்சு'னு சந்தோஷமோ என்னமோ அவளுக்கு. :-)

அந்த கிளிகள் அமெரிக்காவிற்கு பறந்து போயாச்சு. என் வீட்டுக் 'கச்சேரி'யில் இனிமே கிடையாது. அதை நினைத்து சோகத்தோட நான் பாடிய வரிதான் நீங்க தலைப்பில் பார்த்தது.

No comments: